இந்தியா – பாகிஸ்தான் தொடர் ஐ.அரபு இராச்சியத்தில்
இந்தியா – -பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்யார்கான், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின், பி.சி.சி.ஐ. தலைவர் ஜக்மோகன் டால்மியா முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் சகார்யார்கான் கூறுகையில்,
"எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியா-–பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரை பொதுநாட்டில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த தொடர் நடைபெறவுள்ளது.
3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 இருபது ஓவர் போட்டிகளில் இந்தியா-– பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் உலகை பொறுத்தவரை ஆஷஸ் தொடரை விட இந்தியா- –பாகிஸ்தான் தொடர் மிக முக்கியமானது.
கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய- பாகிஸ் தான் கிரிக்கெட் சபைகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த தொடர் நடத்தப்படுகிறது. அடுத்த 8 ஆண்டுகளில் மேலும் 4 தொடர்கள் இந்த இரு அணிகளுக்கிடையே நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
இந்தியா – பாகிஸ்தான் தொடர் ஐ.அரபு இராச்சியத்தில்
Reviewed by Author
on
May 12, 2015
Rating:

No comments:
Post a Comment