மன்னார் ஜிம்றோன் நகர் கிராமத்தில் தீக்காயங்களுக்கு உள்ளானவர்களில் சிறுவன் உயிரிழப்பு.
மன்னார் எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட ஜிம்றோன் நகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முந்தினம் (24) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அன்ரனி யூட் கெவின்(வயது-15) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட போது குறித்த வீட்டினுள் தாய் மற்றும் நான்கு பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.
இதன் போது தீ பாரிய அளவில் பரவிய போது அதனை உணர்ந்து கொண்டவர்கள் உடனடியாக எழுந்து கத்தி கூக்குரலிட அயலவர்கள் விரைந்து வந்து குறித்த ஐவரையும் காப்பாற்றினர்.
எனினும் குறித்த ஐவரில் தாய் மற்றும் இரண்டு மகன்களும் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏனைய இரு மகள்களுக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.இந்த நிலையில் வைத்தியசாலையில் சிகச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் அன்ரனி யூட் கெவின்(வயது-15) என்ற சிறுவன் கடும் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று திங்கட்கிழமை காலை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றிஅ ங்கு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.தாய் மற்றும் மற்றைய மகன் மன்னார் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மன்னார் ஜிம்றோன் நகர் கிராமத்தில் தீக்காயங்களுக்கு உள்ளானவர்களில் சிறுவன் உயிரிழப்பு.
Reviewed by NEWMANNAR
on
May 26, 2015
Rating:
No comments:
Post a Comment