
வியன்னா விமான நிலையத்தில் பணி புரியும் தனியார் பாதுகாப்பு பணியாளர்கள், இலங்கையர்கள் உட்பட்டவர்களை அகதிகளாக அனுப்பி வருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள், சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் தோரணையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அகதிகளை அனுப்புவதாக அவுஸ்திரேலிய செய்தி ஒன்று கூறுகிறது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வியன்னா விமான நிலையத்தில் பணி புரியும் 13 தனியார் பாதுகாப்பு பணியாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தனியார் பாதுகாப்பு பணியாளர் ஒருவரால் சட்டவிரோதமாக அனுப்பப்படவிருந்த இலங்கையர் ஒருவரும் போலந்து நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நடவடிக்கைக்காக குறித்த தனியார் பாதுகாப்பு பணியாளர், அகதி ஒருவரிடம் இருந்து ஏழாயிரம் முதல் ஒன்பதாயிரம் டொலர்கள் வரை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment