அண்மைய செய்திகள்

recent
-

மன்-அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.-Photos

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மன்-அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் (நவோதயா) பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடத்தை நேற்று(24) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

-குறித்த பாடசாலைக்கட்டிடன் ஏற்கனவே பழுதடைந்து மாணவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள கட்டிடத்தை புணர்நிர்மானம் செய்வது தொடர்பில் கடந்த ஆண்டு இப்பாடசாலை அதிபரினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு இனங்க இக்கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினரால் புணர்நிர்மானம் செய்யப் பட்டுள்ளது.

இதற்கான பெருந்தொகை நிதியை பாராளுமன்ற உறுப்பினர் தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார்.
வகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக பாடசாலைக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிபர் மாலை அணிவித்ததோடு பாடசாலை சமூகத்தினரால் மிகுந்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.






மன்-அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடம் திறந்து வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on May 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.