மன்னாரில் திராட்சை செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை!
வர்த்தக ரீதியிலான திராட்சை செய்கை
வர்த்தக ரீதியிலான விவசாயத்தினை அபிவிருத்தி செய்யும் நோக்குடன்; மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டிவிரிச்சான் கிராமத்தில் திராட்சைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக நேற்று (22) திகதி மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்கள் பயனாளிகளுக்குரிய ஸ்ரேல் புளு – (Isral Blue) எனும் இனக் கன்றுகளை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் மன்னார்; மேலதிக அரசாங்க அதிபர்; திருமதி. ஸ்டான்லி டி மெல் கலந்து கொண்டார்.
இத்திட்டமானது மத்திய விவசாய அமைச்சின் நிதியீட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஊடாக அமுல்படுத்தப்படுகிறது என மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திரு .அற்புதச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் இத்திட்டத்தின் மூலம் 50மூ மானிய அடிப்படையில் ரூ.125இ000 க்குப் பெறுமதியான கொடிகளிற்கு ஆதாரமாக அமையும் கற்தூண்களும், பறவைகளின் சேதத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வலை மற்றும் கொடிகளை கத்தரித்து பராமரிக்கத் தேவையான கத்தரிக்கோல். கொடிகளை படரவிடுவதற்கான பிளாஸ்ரிக்காலான காவலிடப்பட்ட கம்பிகளுமாக, 4 பயனாளிகளிற்கு ஒவ்வொரு பயனாளிகளிற்கும் ¼ வீதம் விஸ்தீரணத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் விளக்கம் தருகையில், திராட்சை செய்கைக்கான அனைத்து உதவிகளும். தொழினுட்டப ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட பிரதேசத்தில் விவசாயிகள் திராட்சை செய்கையில் ஆர்வம் காட்டி வருவதாகவும் மடு தேவாலய யாத்திரிகர்களின் வருகையினால் சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
மன்னாரில் திராட்சை செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை!
Reviewed by NEWMANNAR
on
May 25, 2015
Rating:

No comments:
Post a Comment