

பாராளுமன்றத்தைக் கலைத்து, 52 மற்றும் 60 நாட்கள் கால எல்லைக்குள் தேர்தல் நடாத்தவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலொன்றை நடத்துவது குறித்து இதுவரை யாரும் தமக்கு உத்தியோகபூர்வமாக அறியத் தரவில்லை.
எனினும் எவ்வேளையிலும் பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைந்து விடும் என்பதனை மாத்திரமே என்னால் தற்போதைக்கு கூற முடியும். பொது தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து பதில் தன்னிடம் பதில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழு நிறுவுவதுடன் தங்கள் பதவிக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
ஆணைக்குழு நிறுவும் வரையில் சட்டமூலத்திற்கமைய கடமையில் உள்ள ஒருவருக்கு அப்பதவியில் வேலை செய்ய முடியும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் ஊடக சுதந்திரம் பாரிய அளவில் அபிவிருத்தியடைந்துள்ளதனால் மக்களுக்கு தகவல் வழங்குவதும் இலகுவான ஒரு விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் தொடர்பில் தற்போது இளைஞர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது,
இதற்கென ஆரம்பிக்கப்பட்ட முகநூல் கணக்கு உட்பட்ட செயற்பாடுகளின் ஊடாக நாம் தொடர்ந்தும் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலன் கருதி இனிவரும் தேர்தல்களை சனிக்கிழமை தினங்களில் நடத்துவதற்கே தீர்மானித்துள்ளோம்.
இதேவேளை, பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய தேவையில்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரைக்கும் அதன் காலத்தை நீடிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment