
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடாது சாதாரண வேட்பாளராக போட்டியிடுமளவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது
கட்சி நியமிக்கும் வேட்பாளர் தெரிவுக்குழுவுக்கு தமது தரப்பிலும் பிரதிநிதியொருவரை நியமிக்கவும் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவும் கட்சிக்குள் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த அணியின் முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டத்தில் மஹிந்த அணி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீ.ல.சு. கட்சி செயளாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment