
பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்திற்குள் பாகிஸ்தான் -சிம்பாப்வே அணிகள் மோதிய போட்டியின் போது, வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு நுழைய முயன்றவர் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். எனினும் அவர் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.
சிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. நேற்று லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் பாகிஸ்தான்- சிம்பாப்வே அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பகலிரவு போட்டியை காண 20 ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர். இரவு 9 மணியளவில் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, கல்மா சவுக் பகுதியில் இருந்து மைதானத்திற்குள் நுழைய முயன்ற ஒருவரை பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில்இ அந்த நபரும் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரியும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த மனித வெடிகுண்டு தாக்குதலால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்படவில்லை. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
No comments:
Post a Comment