மஹிந்த பின் கதவால் பிரதமராக முயற்சி - ரணில்
ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது பின் கதவால் புகுந்து பிரதமராகுவதற்கு துடித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.
புங்குடுத்தீவு மாணவி படுகொலையை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குமாறும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை புலிகள் என்று கூறுகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ காவத்தை இரட்டைக் கொலை வழக்கில் சந்தேக நபர்கள் விடுதலையானமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களையும் புலிகள் என்று அவர் கூறுவாரா என்று பிரதமர் கேள்வியெழுப்பினார்.
ஜனநாயக மக்கள் முன்னணி கண்டி மாவட்ட பேராளர் மாநாடு முன்னணி உபதலைவர் வேலு குமாரின் ஏற்பாட்டில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கண்டி புஸ்பதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்து கேள்வியெழுப்பினார்.
மஹிந்த பின் கதவால் பிரதமராக முயற்சி - ரணில்
Reviewed by Author
on
June 01, 2015
Rating:
Reviewed by Author
on
June 01, 2015
Rating:

No comments:
Post a Comment