மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக சக்கரநாற்காலிகள் வழங்கும் நிகழ்வோடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு-Photos
உலக சுகாதார நிறுவனத்தின் அடிப்படை சக்கர நாற்காலி பயிற்சிப்பட்டறை சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கும் அவர்களின் வேவைக்கேற்ப விசேடவிதமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகளும் அதன் பிரயோகம் சம்மந்தமான பயிற்சியும் இலவசமாக வழங்கப்பட்டது.
உதவிக்கரம் வாழ்வதயத்தினால் மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கென(மோட்டிவேசன்) அமைப்பினால் 03-06-2015 தொடக்கம் 11-06-2015 வரை 11 தெரிவு செய்யப்பட்ட உதவிக்கர உறுப்பினர்கள் விசேட விதமாக பயிற்றுவிக்கப்பட்டனர்.
பயிற்சிகளை வழங்கியவர்கள்…
திரு.ஜோண்சன் ராஜசேகர் (மோட்டிவேசன் இந்தியா)
திரு.ரு.P.மிகிறான் (மோட்டிவேசன் இலங்கை)
திரு.ம.ளு.சேபால (மோட்டிவேசன் இலங்கை)
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக…
அருட்பணி-ஆ.ஜெயபாலன் (இயக்குநர் Caritas Valvuthayam Mannar)
திரு.து.டீ.சுதர்சன் ((Country Manager Motivation Sri Lanka)
திரு.மு.திலகேசன் ((Manager H.N.B.Mannar Brannch)
திரு.யு. செல்வகணேஸ் (Cluster Manager Central Finance Mannar)
திரு.ளு.ஊ.ஊ.டெஸ்மன் குருஸ் (Manager Central Finance Mannar)
திரு.எமில்ராஐ; (Caritas Valvuthayam Mannar CFD)
திருமதி.அமலி S.S.O (Social Servias officer Mannar)
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் ஊனமுற்றவர்கள் வெறுமனே யுத்தத்தால் மட்டுமன்றி வீதிவிபத்துக்கள் பிறப்பின் நிமித்தம் சில வகையான கொடிய நோயினாலும் இந்நிலைக்கு ஆளாகின்றார்கள். அவர்களுக்கு தேவையான அவைய உறுப்புக்கள் சக்கரநாற்காலிகள் அவற்றினை பாவிப்பதற்கான பயிற்சிகள் மருத்துவவசதிகள் போன்றவற்றுக்கான செலவீனங்கள் நிதிவழங்கும் அமைப்புக்கள் பற்றியும் இனிவரும் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தேவையானவற்றை தகுந்த முறையில் பேணுதல் போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.
இலவசமாக சக்கரநாற்காலிகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் முகத்தில் மகிழ்சியை காணக்கூடியதாக இருந்தது இப்படியான நிகழ்வுகள் இவ்வாறானவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைகின்றது. நிகழ்வினை தொகுத்து வழங்கியவர் அல்போன் டிலாசால்…
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக சக்கரநாற்காலிகள் வழங்கும் நிகழ்வோடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
June 12, 2015
Rating:
No comments:
Post a Comment