நாமல் ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் குற்றப்புலானய்வுப் பிரிவினரால் தற்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு வருகின்றது.
வாக்குமூலம் அளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ காலை 9 மணியளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டமொன்றிற்கு நாமல் ராஜபக்ஸவின் பாதுகாப்புக்காக சென்றிருந்த நபர் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காகவே, பாராளுமன்ற உறுப்பினர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நாமல் ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
June 12, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
June 12, 2015
 
        Rating: 


No comments:
Post a Comment