பாடசாலைகள் மட்ட வலைப்பந்தாட்டப்போட்டி : குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியன்...

இலங்கை பாடசாலைகள் வலைப்பந்தாட்ட சங்கம் நடத்திய 24ஆவது மைலோ கிண்ண பாடசாலைகள் வலைப்பந்தாட்டப் போட்டியில் குருநாகல்இ திருக்குடும்ப கன்னியர் மடம் தொடர்ச்சியாக எட்டாவது வருடமாக ஒட்டுமொத்த சம்பியனானது.
நெஸ்ட்லே லங்கா லிமிட்டட் அனுசரணையுடன் மாத்தளை பேர்னார்ட் அலுவிகாரே விளையாட்டரங்கில் திங்களன்று மாலை நிறைவுபெற்ற இப் போட்டிகளில் திருக்குடும்ப கன்னியர் மடம் 14 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஏ பிரிவுகளில் சம்பியனானதுடன் 16 வயதுக்குட்பட்ட ஏ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
14 மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான இறுதி ஆட்டங்களில் திருக்குடும்ப கன்னியர் மட அணியும் மாலியதேவ மகளிர் கல்லூரி அணியும் மோதின. இந்த இரண்டு போட்டிகளில் முறையே 12 க்கு 6இ 26 க்கு 18 என்ற கோல்கள் கணக்கில் திருக்குடும்ப கன்னியர் மடம் வெற்றியீட்டி சம்பியனாகியது.
16 வயதுக்குட்பட்ட இறுதி ஆட்டத்திலும் திருக்குடும்ப கன்னியர் மட அணி விளையாடியபோதிலும் அப்போட்டியில் ஏப்பாவெல சித்தார்த்த மகா வித்தியாலயம் 11–10 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி சம்பியனானது.
பி பிரிவு போட்டிகளில் ரத்மல்வின்ன மகா வித்தியாலயம் (14இன் கீழ்), பண்டாரபொல மகா வித்தியாலயம் (16இன் கீழ்), யட்டிஹேன மகா வித்தியாலயம் (18இன் கீழ்) ஆகிய பாடசாலைகள் சம்பியனாகின.
இவ் வருடம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசித்திபெற்ற பாடசாலை வலைப்பந்தாட்ட வீராங்கனையாக விசாகா வித்தியாலயத்தின் டில்ஹானி பெரேரா தெரிவானார்.
ஒவ்வொரு வயதுப் பிரிவுகளிலும் அதி சிறந்த வீராங்கனை தெரிவு செய்யப்பட்டு மைலோ கிண்ணங்கள் வழங்கப்பட்டன
பாடசாலைகள் மட்ட வலைப்பந்தாட்டப்போட்டி : குருநாகல் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியன்...
Reviewed by Author
on
July 29, 2015
Rating:
Reviewed by Author
on
July 29, 2015
Rating:

No comments:
Post a Comment