அண்மைய செய்திகள்

recent
-

வித்தியாவின் வழக்கில் இருந்து பின்வாங்கினார் சட்டத்தரணி தவராசா? நீதி கிடைக்குமா?


வித்தியா என்ற அழகான மலர் மலரும் முன்பே கருகி சிதைக்கப்பட்டு இன்னும் இரண்டு மாதங்கள் கூட கடந்து விடவில்லை, வித்தியா என்ற பிஞ்சு உள்ளத்திற்கு ஏற்பட்ட அநீதிக்காக முழு இலங்கையும் , புலம்பெயர் உறவுகளும் நீதி கேட்டு போராடியது.


இத்தகைய புலர் பெயர் அமைப்புக்களினதும் வித்தியாவினது தாய் சகோதரங்களின் வேண்டுகோளையும் ஏற்று தனது சொந்த ஊரான புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமைக்காக எவ்வித பலனையும் பாராது இந்த வழக்கில் வாதாட சிரேஸ்ட சட்டத்தரணியான தவராசா முன்வந்தது மிகப் பெரிய வரப்பிரசாதமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டது.

வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடுமை வேறு எந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்று அவர் இந்த வழக்கில் களமிறங்கி வாதாடி பல விடயங்களை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அத்துடன் சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல காரணமான விடயங்களை விசாரணை செய்யுமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வித்தியாவின் மரணத்தை வியாபாராமாக்கி மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் ஊரில் பெரிய மனிதர்களாய் வேசம் போடும் சில வியாபாரிகளும் சேர்ந்து செய்த விசமனத்தனமான செயல்பாடுகளினால் வித்தியாவின் தாய், சகோதரங்கள் மீது இந்த வியாபாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களின் காரணமாகவும் வித்தியாவின் வழக்கில் இதுவரை வாதாடிய அவர் அந்த வழக்கில் தொடர்ந்தும் வாதாடுவதிலிருந்து விலகிக் கொண்டதாக அறியக் கிடைக்கின்றது.

இந்த துரதிஸ்டவசமான சம்பவத்தினால் வித்தியா விடயத்தில் கரிசனை கொண்ட புலம்பெயர் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உட்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வித்தியாவின் வழக்கில் இனி நீதி கிடைக்குமா என்ற சந்தேகமும் தமிழ் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

சட்டத்தரணி தவராசா அவர்கள் இந்த வழக்கின் பின்னணியில் மறைந்துள்ள பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர மேற்கொண்ட பல முயற்சிகளை முறியடிக்கவே இத்தகையை சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நம்பத்தகுந்ந வட்டாரங்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது. அவலங்களை விற்று பிழைப்பு நடாத்தும் வியாபாரிகளுக்கு இதுவும் ஒரு வியாபாரமா?
வித்தியாவின் வழக்கில் இருந்து பின்வாங்கினார் சட்டத்தரணி தவராசா? நீதி கிடைக்குமா? Reviewed by NEWMANNAR on July 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.