அண்மைய செய்திகள்

recent
-

த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல்


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் முதன்மை வேட்பாளர் கே.ஹென்றி மகேந்திரன் உள்ளிட்டவர்களினால் வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

வேட்பாளர்கள் தொடர்பில் நேற்றுவரை நிலவி வந்த பலத்த இழுபறியின் மத்தியில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து வேட்புமனுவில் நேற்று இரவு கைச்சாத்திட்டனர்.

வேட்பு மனு கைச்சாத்திடும் நிகழ்வானது, தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

வேட்பு மனு கைச்சாத்திடும் நிகழ்வின் முன்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் அக்கரைப்பற்றிக்கு வருகை தந்து வேட்பாளர்கள் தொட்ர்பில் ஆராய்ந்தனர்.

வேட்பாளர்களாக கே.ஹென்றி மகேந்திரன் (முதன்மை வேட்பாளர்) க.கோடீஸ்வரன் (றொபின்), ரி.கலையரசன், சி.ஜெகநாதன், ச.சந்திரகாந்தன், மா.குணசேகரம் (சங்கர்) யோ.கோபிகாந்த், க.அருளம்பலம், மு.நடேசலிங்கம் எஸ்.அன்னம்மா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர் ஒருவர், பிரதேசசபைத் தலைவர் ஒருவர், முன்னாள் மாநகரசபை எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், சட்டத்தரணி, அதிபர், சமூக சேவையாளர்கள் என பலரும் இத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
த.தே.கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத் தாக்கல் Reviewed by NEWMANNAR on July 13, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.