மன்/பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.S இருந்து முதல் முறையாக தேசியமட்ட போட்டிக்குச்செல்லவிருக்கும் சாதனை நாயகன் செல்வன் S.அஜந்தன்
மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய கிராமம் தான் பெரியகுஞ்சுக்குளம்.
மன்னார் வவுனியா பிரதான பாதையிலிருந்து ஆற்றையும் காட்டையும் கடந்து 15 km தொலைதூரத்தில் இந்த சிறு கிராமம் அமைந்துள்ளது. இங்கே வாழும் மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் சாதரண வாழ்க்கைத்தரமுடைய ஏழை மக்களே.
இப்படிப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது விடா முயற்சியாலும் அயராத உழைப்பினாலும் பொறுப்பாசியர்,அதிபர் ஆசிரியர்களின் உன்னத வழிகாட்டலிலும் இன்று சாதனை நாயகனாக மிளிர்கின்றான்
12.07.2015 ஞாயிறு அன்று வவுனியாவில் நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் 15 வயதுப்பிரிவில் கலந்துகொண்டு நீளம் பாய்தலில் முதலாம் இடத்தினை தன்வசப்படுத்தி தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளான்.
எங்கள் பாடசாலையில்(மன்/பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.S) இருந்து முதல் முறையாக தேசியமட்ட போட்டிக்குச்செல்லவிருக்கும் மாணவன் அஜந்தனே,
அது மட்டுமல்லாமல் வசதி வாய்ப்புக்கள் அற்ற ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று தான் கற்ற பாடசாலைக்கும் சொந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்த இந்த மாணவன் உண்மையில் சாதனை நாயகனே!
ஆசிரியர்:-B.Rajinthan (Mn/Periyakunchukulam.R.C.T.M.S)
மன்/பெரிய குஞ்சுக்குளம் R.C.T.M.S இருந்து முதல் முறையாக தேசியமட்ட போட்டிக்குச்செல்லவிருக்கும் சாதனை நாயகன் செல்வன் S.அஜந்தன்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2015
Rating:

No comments:
Post a Comment