மஹிந்த அரசினால் ஏமாற்றப்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...

கடந்த அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு வந்த வேலையற்ற பட்டதாரிக ளுக்கு தகுந்த வேலை வாய்ப்புக்கள் அரசதுறை மற்றும் தனியார் துறை களில் ஏற் படுத்திக் கொடுக்க ஐ.தே.மு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் தொகுதியில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற ஐ.தே.முவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வீட்டுக்குச் சென்று அவர்களை அழைத்து வந்து ஒரு வேலைவாய்ப்பை வழங்கும் அளவுக்கு கிராமப் புறங்களில் பட்டதாரிகள் இருக்கின்றார்கள். அரசாங்க தொழி லொன்றைப் பெறுவதே அவர்களுடைய எதிர்பார்ப்பாகும்.
“அரச சேவையில் பல இலட்சக்கணக்கான வேலைவாய் ப்புக்களை உருவாக்கினோம். பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம்” என வாய்க்கு வந்தவாறு பொய்யானவற்றை கூறினாலும் எத்தனையோ இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். இவர்கள் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதைகளின் உண்மை நிலைகளைக் கண்டறிய கிராமப் புறங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும்.
காலி மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் நான் ஒருவன் தான் என்பதால் என்னை சந்திக்க தினமும் மக்கள் வருகிறார்கள். பொதுமக்களை சந்திப்பதற்கு மூன்று தினங்களை ஒதுக்கியுள்ளேன்.
என்னிடம் வருபவர்களில் 95 வீதமானவர்கள் வேலைவாய்ப்பு கேட்டே வருகிறார்கள். தங்களுடைய படிப்புக்கும் தங்களுடைய தகுதிக்கும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையென அவர்கள் கூறுகிறார்கள். இந்த இளைஞர் யுவதிகளைப் பார்க்கும் போது நீண்டகாலமாக மன அழுத்தங்களுக்கு உள்ளானவர்களாகத் தெரிகிறது.
எங்களது நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாக்குறுதி வழங்கப்பட்டதே தவிர வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படவில்லை. என்றாலும் இந்த இளைஞர் யுவதிகளின் கஷ்ட நிலையை போக்க பாரியளவில் இல்லையென்றாலும் சிறு சிறு வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு எங்களால் முடிந்தது என்பதையெண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.
காலி பத்தேகம தேர்தல் தொகுதியில் உடலமத்த என்ற கிராமத்திலிருந்து ஒரு யுவதி வேலைவாய்ப்புக் கேட்டு என்னிடம் வந்தார். அவர் ஒரு பட்டதாரி. இவ்வளவு காலமும் ஏன் உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையென நான் அவரிடம் கேட்டேன். ஆசிரியர் நியமனம் தரும்படி கேட்டேன். அப்போது நான் பட்டதாரி ஆகியிருந்தேன் எனினும் சான்றிதழ் கிடைத்திருக்கவில்லை.
சான்றிதழ் வந்த பின்னர் சென்றேன் வேலைவாய்ப்புக்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன என்றார். அதன் பின்னர் பல நேர்முகப் பரீட்சைகளுக்குச் சென்றேன். சிலர் எனக்கு கிடைத்துள்ள புள்ளிகள் காணாது என்றார்கள். முதல் 10 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவார்கள் என்றனர். அடுத்தவர்களுக்கு பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று கூறினாலும் இதுவரை எனக்கு அப்படியானதொரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையென அந்த யுவதி தனது கவலையை என்னிடம் வெளியிட்டார்.
இவர்போன்ற எத்தனைபேர் இந்த நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றார்கள் தெரியுமா? தனது வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு தகுந்த தொழில் இல்லாமல் வருமானம் இல்லாமல் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பொன்றுக்காக விண்ணப் பிக்கும் போது நீங்கள் கடிதம் தரும்போது சங்கங்களின் கடிதம் கேட்பீர்களா என்று அந்த யுவதி என்னிடம் கேட்டார். நான் ஏன் என்று வினவினேன். முன்பு என்றால் அப்படித்தான் கடிதம் கேட்டதும் எந்த சங்கத்தில் இருக்கிaர்கள். அதன் கடிதம் கொண்டுவந்திருக்கிaர்களா என்று கேட்பார்கள்.
ஒரு அரசாங்கம் வேலை வாய்ப்பு பட்டியல் தயாரிக்கும்போது அவர்களுடைய ஆதரவாளர்களுடைய பெயர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள். அடுத்த அரசாங்கம் வந்தவுடன் அதுவும் அப்படித்தான் செயற்படும். இவ்வாறான மாற்றங்களை இல்லாதொழிப்பதற்குத் தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்துவரும் பாராளுமன்றமே ஒரு அரசாங்கமாக மாற்றப்படும் எனக் கூறியிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி எந்நேரமும் தகைமைக்கு முன்னுரிமை வழங்கும். சமூகப் பிரச்சினைகளின் போது அரசியலைவிட மனிதாபிமானத்தையே மதித்தது. 1977ல் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தைவிட பாரிய மாற்றமொன்றை அடுத்துவரும் நிலையான அரசாங்கத்தின் மூலம் உருவாக்க எதிர்பார்த் துள்ளோம்.
இந்த யுவதி போன்று வேலை வாய்ப் புக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு நான் கேட்கும் ஒரே கேள்வி. தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஒன்றைத் தரட்டுமா என்று தான் கேட்போம். இவர்களில் பல பேருடைய எதிர்பார்ப்பு அரச துறையில் வேலைவாய்ப்பை பெறுவதாகும். இதுதான் இங்குள்ள பெரும்பாலான இளைஞர் யுவதிகளின் மனோநிலை.
அரச துறையைப் பேன்றே தனியார் துறையையும் மேம்படுத்தி அதனைப் பாதுகாப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நாம் திட்டமிட்டிருக்கிறோம் என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மஹிந்த அரசினால் ஏமாற்றப்பட்ட பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு...
Reviewed by Author
on
July 31, 2015
Rating:
Reviewed by Author
on
July 31, 2015
Rating:

No comments:
Post a Comment