அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்டத்தில் வாழ்கின்ற எந்த ஒரு குடி மகனும் வெற்றிலையை ஆதரிக்க மாட்டார்கள்-றிஸாட் பதியுதீன்.-Photos

நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு மைத்திரிபால சிறி சேன அவர்களை இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கிய வரலாற்றை நாம் இன்று மறந்து விட முடியாது என வன்னி மாவட்ட முன்னாள் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் அலுவலகத்தை நேற்று(23) வியாழக்கிழமை மாலை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இன்று நாம் யாரை வீட்டிற்கு அனுப்பினோமோ அவர் மீண்டும் மறு வடிவத்தில் பிரதம வேற்பாளராக வருகை தந்திருக்கின்றார்.

அனுராதபுரத்தில் அவருடைய கட்சியைச் சேர்ந்த அனைவரும் கைகளை உயர்த்தி 113 பேரை வெற்றியடையச் செய்து மஹிந்த ராஜபக்ஸ அவர்களை பிரதமராக்கி தருகின்றோம் என்று சபதமிட்டுள்ளனர்.

இரண்டு முறை ஜனாதிபதியாக வெற்றி பெற்று இரண்டாவது தடவை 150 உறுப்பினர்களுக்கு மேல் பெற்ற காரணத்தினால் சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடம் பெற்ற அநீதிகளையும்,துன்பங்களையும் சுட்டிக்காட்டிய போது கண்டும்,காணாதது போல் மத வாதிகளையும் இன வாதிகளையும் தான் விரும்பியதை இந்த நாட்டிலே செய்வதற்கு இடம் கொடுத்த மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்குவதற்காக அவருடைய முகவர்களாக வன்னி மாவட்டத்திலே சிலர் வெற்றிலைக்கு வாக்குத்தேடி வந்திருக்கின்றார்கள்.

வன்னி மாவட்டத்திலே வாழுகின்ற எந்த ஒரு குடி மகனும்,சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எவரும் இந்த தேர்தலிலே வெற்றிலையை ஆதரிக்க மாட்டார்கள் என்பதிலே நாம் உறுதியாக இருக்கின்றோம்.

காரணம் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை பிரதமராக்கி மீண்டும் இந்த நாட்டிலே மக்களை துன்பத்திலும்,துயரங்களிலும் கொண்டு விட இந்த நாட்டில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தை சேர்ந்த மக்கள் தனது வாக்கை பயண்படுத்த மாட்டார்கள் என நாம் நம்புகின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த தேர்தலிலே வன்னி,மட்டக்களப்பு,அம்பாரை,திருகோணமலை ,புத்தளம் ,குருநாகல் போன்ற பல மாவட்டங்களிலே போட்டியிடுகின்றோம்.

இத்தேர்தலிலே 8 ஆசனங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமை எங்களுக்கு தெரிகின்றது.

அத்தோடு தேசியப்பட்டியல் ஆசனத்தோடு 10 ஆசனங்களை வருகின்ற இந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்றுக்கொள்ள கூடிய சந்தர்ப்பம் உள்ளது.இதற்கு இந்த நாட்டு மக்கள் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவார்கள்.

கடந்த காலங்களிலே சில அரசியல் கட்சித் தலைமைகள் தேர்தல் காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அதனை நிறைவேற்றாத வரலாறு உள்ளது.

ஆனால் நாங்கள் கடந்த காலங்களிலே ஒரு மக்களின் பிரதி நிதியாக,பாராளுமன்ற உறுப்பினராக,அமைச்சராக இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும்,மக்களுக்கான பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என நாம் செய்திருக்கின்றோம்.

எனவே இன்று மக்கள் யதார்த்தங்களை புறிந்து கொண்டு உண்மைக்காக,நியாயத்திற்காக இன,மத,பேதங்களுக்கு அப்பால் இந்த நாட்டிலே நிம்மதியாக வாழுகின்ற ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த நல்ல பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும் என்பதற்காக இன்று பலர் எங்களுடன் அணி திரண்டிருக்கின்றார்கள் என்பதனை இங்கு பார்க்கின்ற போது எங்களுக்கு தெரிகின்றது.என அவர் மேலும் தெரிவித்தார்.







வன்னி மாவட்டத்தில் வாழ்கின்ற எந்த ஒரு குடி மகனும் வெற்றிலையை ஆதரிக்க மாட்டார்கள்-றிஸாட் பதியுதீன்.-Photos Reviewed by NEWMANNAR on July 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.