அண்மைய செய்திகள்

recent
-

மடு அன்னையின் ஆவனித் திருவிழா தொடர்பில் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்-Photos

மன்னார் மடு அன்னையின் ஆவனித் திருவிழா தொடர்பான முன் ஆயத்த கலந்துரையாடல் இன்று(24) வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.

எதிர் வரும் ஆவனி மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மடு அன்னையின் ஆவனித்திருவிழா திருப்பலிக்கான நவநாள் திருப்பலிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று எதிர்வரும் 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் 15 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

-இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மடு திருத்தளத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மடுத்திருத்தலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டி முன் ஆயத்தங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக குடி நீர்,சுகாதாரம்,மருத்துவம்,போக்குவரத்து,பாதுகாப்பு உற்பட அங்கு மேற்கொள்ளப்பட வேண்டி அவசிய தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ் பிள்ளை ,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை,மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,பிரதேசச் செயலாளர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,வைத்தியசாலை அதிகாரிகள் உற்பட திணைக்கள தலைவர்களும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






மடு அன்னையின் ஆவனித் திருவிழா தொடர்பில் அரச அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்-Photos Reviewed by NEWMANNAR on July 24, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.