
பிரித்தானிய குட்டி இளவரசர் ஜார்ஜ இன்று இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுவதால் கென்சிங்டன் அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதியினருக்கு கடந்த 22.7.2013 ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டினர்.
தற்போது, குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது இரண்டாவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதையொட்டி, பிரித்தானிய கென்சிங்டன் அரண்மனையில் கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அழகாக சீஸ் சொல்லும் மகன் ஜார்ஜுடன் இளவரசர் வில்லியம்ஸ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
ஜார்ஜின் பிறந்தநாளையொட்டி ராஜ குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ளும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment