அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவு...


தேர்தல்கள் ஆணையாளரின் சுற்றுநிருபம் வெளியீடு

ஆகஸ்ட் 17ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பணியாட் தொகுதியினருக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்கேற்ற வகையில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் 2015/02 இலக்க 2015.08.21ம் திகதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் அல்லது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரின் அறிவுறுத்தல்களுக்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட பணியாட் குழுவினருக்கு கொடுப்பனவு செய்வதற்கேற்ற வகையில் முழுமையான விபரங்களை சுற்று நிருபம் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு பணிக்குரிய கட்டணத் தொகைகளும், அவை வழங்கப்பட வேண்டிய முறை பற்றியும் சுற்றுநிருபத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு நிலையமொன்றில் வாக்கெடுப்பு கடமையில் ஈடுபட்ட அலுவலர்கள் பின்வரும் ஒழுங்கில் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்வர், வலயங்களுக்குப் பெறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் ரூபா. 3750, வாக்கெடுப்புப் பிரிவு பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நிறுவப்பட்ட இணைப்பு அலுவலகங்களின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் 3750, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் ரூபா. 3500, மேலதிக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் ரூபா. 3000, விசேட கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் ரூபா. 2100, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் எழுதுனர் ரூபா 2000, கனிஷ்ட் ஊழியர் ரூபா. 1450.

தேர்தல் தினத்திற்கு முந்திய தினம் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு வாக்குப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு விநியோகம் மற்றும் கையேற்றல் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் ரூபா 1000, சிரேஷ்ட, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் மற்றும் எழுதுனர் ரூபா. 800, அலுவலக உதவி யாளர் ரூபா 700 வாக்கெண்ணல் கடமையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு பின்வரும் அடிப்படையில் கொடுப்பனவு வழங்கப்படும்.

போட்டியிட்ட கட்சிகள் சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கை 17க்கும் குறைவான மாவட்டங்களான காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொலனறுவை, பதுளை ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றிய தலைமை வாக்கெண்ணும் அலுவலர் ரூபா. 6250, பிரதித் தலைமை வாக்கெண்ணும் அலுவலர் 4250, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் ரூபா 3500, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் ரூபா 2300, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் 2000, கனிஷ்ட ஊழியர் 1250.

போட்டியிட்ட கட்சிகள் சுயேச்சைக் குழுக்களின் எண்ணிக்கை 18 முதல் 24 வரையான மாவட்டங்களாக களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றிய தலைமை வாக்கெண்ணும் அலுவலர் ரூபா 6500, பிரதித் தலைமை வாக்கெண்ணும் அலுவலர் 4500, உதவித் தெரிவித்தாட்சி அலுவலர் ரூபா 3750, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் ரூபா 2450, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் 2150, கனிஷ்ட ஊழியர் 1350.

போட்டியிட்ட கட்சிகள் சுயேச்சை குழுக்களின் எண்ணிக்கை 25க்கும் அதிகமான மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றிய தலைமை வாக்கெண்ணும் அலுவலர் 6750, பிரதித் தலைமை வாக்கெண்ணும் அலுவலர் 4750, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் ரூபா 4000, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் ரூபா 2600, கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர் 2300 கனிஷ்ட ஊழியர் 1450.

கொடுப்பனவுக்கு நியமனக் கடிதம் மற் றும் தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்ட அச்சடித்த வரவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். கொடுப்பனவுகள் யாவும் ஒக்டோபர் 31ம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கி முடிக்கப்படல் வேண்டும் எனவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சுற்று நிருபம் அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்கள், மாகாணசபை பிரதம செயலாளர்கள், இலங்கை மத்திய வங்கி ஆளுநர், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் நியதிச் சட்ட ஆணைக் குழுக்களின் செயலாளர்கள், சகல திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுனர்களின் செயலாளர்கள், மாகாண அரசாங்க சேவை ஆணைக் குழுக்களின் செயலாளர்கள், அனைத்து கூட்டுத்தாபன, நியதி சட்ட சபைகளின் தவிசாளர்கள், பொது முகாமையாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவு... Reviewed by Author on August 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.