நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க மன்னார் லீக்கின் ‘‘B’Division சம்பியனாகியது
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் ‘டீ’ பிரிவு அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டி இன்று 28.08.2015 மன்னார் பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது. இன்று காலை முதல் மாலை வரை இப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ குணசீலன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்போட்டியின் 1வது அரை இறுதிப்போட்டியில் விடத்தல்தீவு புதிய யுனைற்றட் வி க வும் மாளிகைப்பிட்டி முருங்கன் சித்திவிநாயகர் வி க வும் மோதியதில் விடத்தல்தீவு புதிய யுனைற்றட் வி க 2;-0 என்ற போல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்ஷபோட்டிக்கு தகுதி பெற்றது. மற்றைய 2வது அரை இறுதிப்போட்டியில் நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க வும் யோசவ்வாஸ் நகர் நற்கருணைநாதர் வி கவும் மோதியதில் நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி மாலை 4.45 மணிக்கு ஆரம்பமாகியது. நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க வும் விடத்தல்தீவு புதிய யுனைற்றட் வி க வும் மோதியது. ஆட்டம் தொடக்கம் முதல் விறவிறுப்பாக இருந்தாலும் நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க வின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. முதல் பாதியில் 2 கோல்களையும் இரண்டாம் பாதியில் இலகுவான 1 கோலையும் போட்டு நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க 3-0 என்ற போல் கணக்கில் வெற்றி பெற்று ‘டீ’ னுiஎளைழைn சம்பியனாகியது.
பிரதம விருந்தினர் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ குணசீலன் அவர்கள் ஊடாக 1ம் 2ம் இடங்களைப்பெற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பணப்பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. அத்துடன்; பங்குபற்றிய சகல கழகங்களுக்கும் உதைபந்துகளும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கினால் வழங்கப்பட்டன.
அத்துடன் ‘யு’ னுiஎளைழைn கழகங்களுக்கான உதைபந்தாட்டப்போட்டிகள் 05.09.5012 அன்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் - ப.ஞானராஜ்
கௌரவ செயலாளர்
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்
நானாட்டான் அச்சங்குளம் சென் ஜோசப் வி க மன்னார் லீக்கின் ‘‘B’Division சம்பியனாகியது
Reviewed by Admin
on
August 30, 2015
Rating:

No comments:
Post a Comment