நிர்மாணத்துறையில் இலங்கைக்கு உரித்தான வரலாற்று அறிவையும் சேர்க்க வேண்டும்..
மன்னர்கள் காலத்தில் 34000 வாவிகள் நிர்மாணம்
நிர்மாணத் துறையில் தொழில்நுட்ப அறிவு முழுமையாகப் பயன்படுத்தப்பட்டாலும் தொழில்நுட்ப பயன்பாட்டின் போது இலங்கைக்கே உரித்தான வரலாற்று ரீதியான அறிவையும் அதனோடு சேர்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலகில் எந்த நாட்டுக்கும் இரண்டாம் பட்சமாகாத புகழ் இலங்கையின் நிர்மாணத்துறைக்கு இருந்து வந்ததாகத் தெரிவித்த அவர், மன்னராட்சிக் காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிர்மாணங்கள் பல மேற்கொள்ளப்பட்ட தாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் 15ஆவது வருடாந்த மாநாட்டுடன் இணைந்ததாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிர்மாணத்துறை 2015 கண் காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிறிஸ்துவுக்கு முன்பிருந்த காலம் தொட்டே இலங்கையில் இரும்பு பயன் படுத்தப்பட்மைக்கு வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எமது நாட்டை ஆண்ட மன்னர்கள் 34,000ற்கும் மேற்பட்ட வாவிகளை நிர் மாணித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையின் நிர்மாணத்துறை அறிவை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும். நிர்மாணத்துறை தொடர்பான தேசிய திட்டமொன்றும் கொள்கையொன்றும் தயாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இதனை அரச மற்றும் தனியார் துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக நான் தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றும் அவர் கூறினார். இதன்போது நிர்மாணத் துறையில் பயிற்றப்பட்ட ஊழியர்கள் பற்றாக்குறை காணப்படுவது குறித்து தேசிய நிர்மாணத் துறை சங்கம் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியது.
இதற்குத் தேவையான செயற்றிட் டத்தை முன்வைக்குமாறு தெரிவித்த ஜனாதிபதி, அதன்போது அரசாங்கத் துக்குத் தலையீடு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ் வில் அமைச்சின் செயலாளர்கள், நிர்மாணத் துறை சங்கத்தின் தலைவர் தேசமான்ய எஸ்.பி.லியனாராச்சி உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிர்மாணத்துறையில் இலங்கைக்கு உரித்தான வரலாற்று அறிவையும் சேர்க்க வேண்டும்..
Reviewed by Author
on
August 28, 2015
Rating:

No comments:
Post a Comment