எதிர்க்கட்சித் தலைவர் யார்? ஐ. ம. சு. மு. செயலர் முதலாம் திகதி அறிவிப்பார்...
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது செப்டம்பர் முதலாம் திகதி அனைவருக்கும் தெரியவரும். அவரின் பெயரை ஐ. ம. சு. மு.செயலாளர் எழுத்து மூலம் சபா நாயகருக்கு அறிவிப்பார் என ஐ. ம. சு. மு. எம். பி. மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து கடந்த தினங்களில் பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. எஸ். பி. திசாநாயக்க, குமார வெல்கம ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டதோடு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தது.
ஆனால், இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, எதிர்க்கட்சித் தலைவரை அறிவிக்கும் உரிமை ஐ. ம. சு.மு. செய லாளருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். செப்டம்பர் முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சு. க. வே வைத்திருக்கும் என அறியவருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் யார்? ஐ. ம. சு. மு. செயலர் முதலாம் திகதி அறிவிப்பார்...
Reviewed by Author
on
August 28, 2015
Rating:

No comments:
Post a Comment