உலகை வெல்லும் கிரீடா சக்தி - 2015
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழி நடாத்தப்படும் உலகை வெல்லும் கிரீடா சக்தி விளையாட்டு திட்டத்தில் பயிற்சிபெற்று வருகின்ற மாவட்ட ரீதியான உதைபந்தாட்ட வீர ,வீராங்கனைகளுக்கிடையில் 01.10.2015 ம் திகதி தொடக்கம் 08.10.2015 ம் திகதி வரை கொழும்பு டொரிங்டன் விளையாட்டுத்துறை அமைச்சு விளையாட்டத்திடலில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் எமது மாவட்ட உதைபந்தாட்ட கிரீடா சக்தி; வீர ,வீராங்கனைகள் சிறப்பான கீழே குறிப்பிடப்படும் பெறுபேறுகளை பெற்றுள்ளார்கள்.
அவர்கள் அனைவரையும் மாவட்ட செயலகம் சார்பாகவும் மாவட்ட மக்கள் சார்பாக பாராட்டி வாழத்துகின்றோம். அவர்களை பயிற்றுவித்த மாவட்ட கிரீடா சக்தி பயிற்றுனர்கள் மற்றும் உரிய பாடசாலை ஆசிரியர்கள்;, பாடசாலை அதிபர்கள் அனைவருக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆண்கள்அணி
முதலாவது போட்டி
01.மன்னார் மாவட்டம் எதிர் திருக்கோணமலை மாவட்டம் 2:0
02.மன்னார் மாவட்டம் எதிர் அம்பாரை மாவட்டம் (காலிறுதி) 3:2
03.மன்னார் மாவட்டம் எதிர் காலி மாவட்டம் (அரையிறுதி) 7:6 (பெனால்டி)
04.மன்னார் மாவட்டம் எதிர் மட்டக்களப்பு மாவட்டம் 1:2 (இறுதியாட்டம்)
உலகை வெல்லும் கிரீடா சக்தி - 2015
Reviewed by NEWMANNAR
on
October 12, 2015
Rating:

No comments:
Post a Comment