அண்மைய செய்திகள்

recent
-

இலண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் மன்னார் நறுவிழிக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.-Photos



யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் பாடசாலைகள்வடக்கு கிழக்கு பகுதிகளில் கிராமப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றது. இப்பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியதுதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் தலையாக கடமையாகும்.

இதன்படி இலண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2009ம் ஆண்டு யுத்த காலப்பகுதிக்கு பிற்பாடு யுத்த இழப்புக்களை உடலிலும் மனதிலும் சுமந்து வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது.

குறிப்பாக கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், யுத்தத்தில் தமது அங்கங்களை பறிகொடுத்து வாழ்வதற்காக போராடுபவர்கள், மற்றும் யுத்தத்தில்பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காது பராமரிக்கப்பட வேண்டிய நிலையில்இருப்பவர்கள், போன்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் சுயதொழிலுக்கான வாழ்வாதார உதவிகள் மருத்துவ உதவிகள் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது. இந் நிலையில் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் இணை நிறுவனமான இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை நிறுவனமானது தாயகத்தில் பல்வேறு பரினாமங்களில் தன்னார்வ தொண்டு செய்து வருகின்றது.


இதன்படி இன்று மன்னார் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் நறுவிழிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக இப் பாடசாலையில் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் சிறுவர் தினம் கொண்டாடப்பட்ட அதே வேளை இப் பாடசாலையில் கல்விகற்கும் 170மாணவர்களுக்காக பாதணிகளும் புத்தகப்பைகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மன்னார் முருங்கன் கோட்டக்கல்வி அதிகாரி,மன்னார் நகர சபையின் முன்னால் உறுப்பினர் இ.குமரேஸ்,நானாட்டான் பிரதேச சபையின் முன்னால் உப தலைவர் றீகன் , இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் பணியாளர்களான ப.சுபாஸ்கரன், சி.சிவகாந்தன், கோ. ரூபகாந், பா.வினோதராஜ் உட்பட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் உற்பட பலரும் குறித்த சிறுவர்தின நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளையும் கண்டு கழித்தனர்.










இலண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினால் மன்னார் நறுவிழிக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.