அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்களை‘பிரமிட்’முறையில் ஏமாற்றும் நடவடிக்கை அதிகரிப்பு

மன்னாரில் ‘பிரிமிட்’ முறையில் இலாபம் அடையும் அனைவரையும் உடன் கைது செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மன்னாரில் ‘பிரமிட்’ முறையில் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பேர்(2) கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.இதன் போதே விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த உத்தரவைப்பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் வங்காலையைச் சேர்ந்த இருவர் குறித்த பிரமிட் முறை மூலம் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொரிவித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன் போது பிரமிட் முறையில் தமக்கு பொருட்களை விற்பனை செய்தவர்கள் அதன் மூலமாக குறித்த பொருட்களை மேலும் பலருக்கு விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியும் என கூறி மக்களை ஏமாற்றி விற்பனை செய்துள்ளனர்.குறித்த நபர்களை நம்பி பாதிக்கப்பட்ட இருவரும் தலா 61 ஆயிரத்து 300 ரூபாவை அவர்களிடம் செலுத்தியுள்ளனர்.

குறித்த பணத்தை செலுத்தி பிரமிட் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த பொருட்களின் மூலம் குறித்த இருவருக்கும் எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை.

குறித்த செயற்பட்டின் மூலம் தமக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை எனவும் இதனால் தமக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளது என பாதீக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது ஏமாற்றம் தொடர்பிலும் பாதீக்கப்பட்டவர்கள் விரிவாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து விசாரனைகளை பதிவு செய்த மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரனை கடந்த திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன் போது மன்னார் வங்காலையைச் சேர்ந்த இருவரை பிரமிட் முறையில் ஏமாற்றியமாக கூறப்படும் இருவரை மன்னார் பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது மன்னார் நீதவானினால் மோற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது பிரமிட் முறையில் ஏற்கனவே பலர் பொருள் விற்பனை மற்றும் இலாபமூட்டும் செயலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டு மன்னார் நிதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களுக்கு முன்னரும்,அவர்களுக்குப்பின்னரும் பலர் குறித்த பிரமிட் முறையில் மக்களை ஈடுபட்டு பணம் சம்பாதித்து வந்தமை விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

விசாரனைகளை மேற்கொண்டு வந்த மன்னார் நீதவான் பிரமிட் முறையில் செயற்படும் அனைவரையும் கைது செய்து மன்றில் ஆஜர் படுத்துமாறு நீதவான் மன்னார் பொலிஸாருக்கு உத்தரவிட்டதோடு,பிரமிட் முறையில் மக்களை ஏமாற்றியதாக கூறப்படும் குறித்த இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.



இதே வேளை குறித்த ‘பிரமிட்’ முறையில் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பாதீக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மன்னார் மக்களை‘பிரமிட்’முறையில் ஏமாற்றும் நடவடிக்கை அதிகரிப்பு Reviewed by NEWMANNAR on October 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.