முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு...
2015ஆம் ஆண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ணத் தொடர் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பிக்கிறது.
2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர், தொடர்ந்து 4ஆவது முறையாக நடைபெறும் முரளி ஹார்மனி கிண்ணத் தொடரில் மொத்தம் 16 ஆண்கள் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் பங்குபற்றுகின்றன.
இந்தப் போட்டிகள் அனைத்தும் வடக்குப் பகுதியிலுள்ள மைதானங்களில் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். யாழ்ப்பாணம், ஒட்டுச்சுட்டான், மாங்குளம், கிளிநொச்சி ஆகிய
பிரதேச மைதானங்களில் நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் குழு 'ஏ' இல் யாழ். கல்லூரி கூட்டு அணி, டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, மலியதேவ கல்லூரி, மொனராகலை ஆகிய அணிகளும்.
குழு 'பி' இல் யாழ். சென். ஜோன்ஸ், மலையக கல்லூரிகளின் கூட்டு அணி, தெபரவெவ மத் திய கல்லூரி, திருகோண மலை -– மட்டக்களப்பு கூட்டு அணி ஆகிய அணி கள் இடம்பிடித்துள்ளன.
அதே போல் குழு 'சி' இல் ஆனந்தா கல்லூரி, கிளிநொச்சி -முல்லைத்தீவு கூட்டு அணி, வத்தளை சென்.அந்தனிஸ், சர்வதேச பாடசலைகளுக்கிடையிலான கூட்டு அணியும் இடம்பிடித்துள்ளன.
குழு 'டி' இல் ரிச் மண்ட் கல்லூரி, பி.டி.எஸ்.குலரத்ன கல்லூரி, மன்னார் – வவுனியா கூட்டு அணி மற்றும் தர்மராஜா கல்லூரி ஆகிய அணிகளும் இடம்பிடித்துள்ளன.
இந்தத் தொடர் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வின் போது பேசிய இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவானும் இந்தக் கிண்ணத் தொடரின் நாயகனுமான முத்தையா முரளிதரன், மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நட்பையும் ஏற்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது விஸ்தீரணமடைந்து இருப்பதாகவும், சிறந்த வீரர்களை கண் டெடுக்கவும் இது உதவும் என்றும் தெரிவித்தார்.
முரளி கிண்ணத் தொடர் புதனன்று ஆரம்பம் ; 24 அணிகள் பங்கேற்பு...
Reviewed by Author
on
October 03, 2015
Rating:

No comments:
Post a Comment