மிகவும் குறைவான ஊதியம் பெறும் 60 லட்சம் பிரித்தானியர்கள்: காரணம் என்ன?
பிரித்தானியாவில் 60 லட்சம் ஊழியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான ஊதியம் பெறவில்லை என்ற தகவலை புதிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் இந்த ஆய்வில் சராசரியாக 60 லட்சம் பிரித்தானியர்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமளவுக்கு ஊதியம் கிடைப்பதில்லை என தெரிய வந்துள்ளது.
ஒட்டு மொத்த பிரித்தானியாவில் ஊழியர் ஒருவர் ஒரு மணி நேரத்திற்கு 7.85 பவுண்டுகளை ஊதியமாக பெறுகிறார், ஆனால் லண்டனில் பணிபுரியும் ஊழியருக்கு 9.15 பவுண்டுகள் தரப்படுகிறது.
இதில் பகுதி நேர ஊழியராக பணிபுரியும் பெண்களை ஒட்டு மொத்தமாக பாதிப்புக்கு உள்ளாக்குவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றன.
18-21 வயதுடைய இளைஞர்களில் 72% பேர் சராசரிக்கும் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்து வருவதாக கூறும் அந்த அறிக்கை, 30 முதல் 39 வயதுடையவர்களில் 17% பேர் மட்டுமே சராசரிக்கும் குறைந்த ஊதியத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அன்றாட செலவீனங்கள் அதிகரிப்பதும் விலைவாசி உயர்வும் இதுபோன்ற சிக்கலை அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கும் அந்த ஆய்வு, அதனாலையே மக்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றி ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மிகவும் குறைவான ஊதியம் பெறும் 60 லட்சம் பிரித்தானியர்கள்: காரணம் என்ன?
Reviewed by Author
on
November 01, 2015
Rating:
Reviewed by Author
on
November 01, 2015
Rating:





No comments:
Post a Comment