அண்மைய செய்திகள்

recent
-

உலகிலேயே அதிகளவில் பேய்களால் சூழ்ந்த விசித்திர தீவு!


இத்தாலியில் உள்ள Poveglia என்ற நிலப்பரப்பில் அமைந்துள்ள தீவில் பல விசித்திர சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
Poveglia என்ற ஆவிகள் சூழ்ந்த்தாக கருதப்படும் தீவில் கடந்த 1920ம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த ஒரு நிலையம் ஒன்றை மருத்துவர் ஒருவர் அமைத்துள்ளார்.

அந்த தீவில் உள்ள சுமார் 18 ஏக்கர் நிலத்தில், இருந்த நிலையம் ஒன்றில், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்துள்ளனர்.

மேலும், பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை எரித்து கொன்ற சுடுகாடு ஒன்றும் அங்கு அமைந்திருந்துள்ளது.

வரலாற்று அறிஞர்களின் கணக்கு படி, அந்த தீவில் சுமார் 150,000 மக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த தீவின் அருகே வாழும் மக்கள் அந்த தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனை அருகே செல்வதை பேய்களின் நடமாட்டம் இருப்பதாக கருதி பெருமளவில் தவிர்த்து விடுகின்றனர்.

கடந்த 1968ம் ஆண்டு இந்த தீவு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் பலரும் அங்கு இருந்த மருத்துவர் மற்றும் நோயாளிகளின் ஆவிகள் இன்றும் இருப்பதாக நம்புகின்றனர்.

உலகிலேயே அதிகளவில் பேய்கள் மற்றும் கெட்ட ஆவிகள் உள்ள இடமாக இந்த தீவினை அங்குள்ள பொதுமக்கள் கருதுகின்றனர்.

பின்னர், இத்தாலிய தொழிலதிபர் Luigi Brugnaro என்பவர் அந்த தீவினை 99 ஆண்டுகளுக்கு சுமார் 400,000 பவுண்டுகளுக்கு ஏலத்தில் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



உலகிலேயே அதிகளவில் பேய்களால் சூழ்ந்த விசித்திர தீவு! Reviewed by Author on November 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.