மன்னார் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு.நோயாளர்கள் சிரமம்- மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அம்புலான்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவசர சிசிச்சைகளுக்கு நோயாளர்களை வேறு வைத்தியசாலைக்கு உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு மன்னார் வைத்தியசாலை தரப்பினர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகம் மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவித்துள்ளர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மன்னார் பொது வைத்தியசாலையாக தர முயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற போதும் அவை இது வரை நிவர்த்தி செய்யப்படவில்லை என்பது மன்னார் வைத்தியசாலை பணியாளர்களினதும்,மக்களினதும் கவலையாக உள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்கனவே 5 அம்புலான்ஸ் வண்டிகள் காணப்பட்டது.அதில் ஒன்று விபத்தின் காரணமாக கடுமையாக சேதமடைந்து பவனைக்கு உற்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
இரண்டு அம்புலான்ஸ் வண்டிகள் திருத்த வேலை காரணமாக உள்ளது.
ஏனைய இரண்டு அம்புலான்ஸ் வண்டிகளை மாத்திரமே மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சேவைகளுக்கு பயண்படுத்தி வருகின்றது.
எனினும் குறித்த இரு அம்புலான்ஸ் வண்டிகளை பயண்படுத்தி அவசர சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் மன்னார் வைத்தியசாலை தரப்பினர் உள்ளனர். இது மட்டுமின்றி மன்னார் பொது வைத்தியசாலையில் அம்புலான்ஸ் வண்டி சாரதிகளாக 06 பேர் கடமையாற்ற வேண்டிய இடத்தில் 04 பேர் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர்.
இதனால் சாரதிகளுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு மன்னார் பொது வைத்தியசாலையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.
குறிப்பாக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளரின் கடமைக்கு உயர் அதிகாரிகள் சிலர் தடையாக செயற்பட்டு வருகின்றமையினால் வைத்தியசாலையில் உள்ள அம்புலான்ஸ் வண்டி பற்றாக்குறை உற்பட பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்விடையங்கள் தொடர்பில் அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பனர்கள்,வடமாகாண அமைச்சர்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள் கவனம் செலுத்தி மன்னார் பொது வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என மன்னார் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் வண்டிக்கு தட்டுப்பாடு.நோயாளர்கள் சிரமம்- மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை.
Reviewed by NEWMANNAR
on
November 01, 2015
Rating:

No comments:
Post a Comment