ப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரி 9 வயது சிறுவன்...
கணினி விளையாட்டுக்களை தயாரிக்கும் ப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரியாக 9 வயது இந்தியச் சிறுவன் ரூபன் போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் மிகப்பெரிய மாநாடாக கருதப்படுவது கிரவுண்டு சீரோ சம்மிட் ஆகும். 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகின் தலைசிறந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் இளம் மற்றும் சிறிய உறுப்பினர் ரூபன் போல் ஆவார்.
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து வரும் இச்சிறுவன் சைபர் செக்யூரிட்டி, ஹேக்கிங், ஆப் டெவலப்பர் என பல்வேறு பணிகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு சிறப்புரை வழங்கி இந்த ஆண்டு கிரவுண்டு சீரோ சம்மிட் 2105 குழுவின் சிறப்பு தூதராக ரூபன் போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் குறிக்காகோள் என்ன என்பது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, தான் ஒரு சிறந்த சைபர்ஸ்பை ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார் ரூபன் போல்.
ப்ஷரூடென்ட் கேம்ஸ் நிறுவனத்தின் தலைமையதிகாரி 9 வயது சிறுவன்...
Reviewed by Author
on
November 11, 2015
Rating:
Reviewed by Author
on
November 11, 2015
Rating:


No comments:
Post a Comment