அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்!


தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சி அடையாள உண்ணாவிரதம் நடைபெறுகின்றது
இலங்கை சிறைகளில் பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் வதைபடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று காலை 8 மணி முதல் கிளிநொச்சி, கந்தசாமி கோவில் முன்னறலில் அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட்ட கைதிகளின் உறவுகள் மற்றும் மனிதாபிமானிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் மாலை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண கர்த்தால்

எதுவித விசாரணைகளுமின்றி நீண்ட காலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலை வேண்டியும்  கைதிகளின்    குடும்பங்கள் தொடர்ந்து பல கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

அக் குடும்பங்களின் துயர் துடைப்பதற்காகவும் பூரண கர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சி நகரிலும் நடைபெறவுள்ளது.

இக் கர்த்தாலில் மருத்துவசேவை மற்றும் உணவகங்கள் தவிர்ந்த அனைத்துக்கடைகளை பூட்டியும் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறும் எதுவித குழப்பங்கள் இன்றியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

இக் கர்த்தால்  நடைபெறுவதற்கு  பூரண ஆதரவினை தருமாறு வர்த்தகர்களை வேண்டுகின்றனர் கிளிநொச்சி வர்த்தக சங்கத்தினர்.


அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் அடையாள உண்ணாவிரதம்! Reviewed by Author on November 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.