அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​...


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று நடை­பெற்ற ஊட­க­விய­லாளர் மாநாட்டின் போதே அமைச் சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்­கத்தில் இருந்­த­மைக்­காக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் பலர் கைது செய்­யப்­பட்­டனர். இதன்­பி­ர­காரம் இது­வ­ரைக்கும் 216 அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் உள்­ளனர். இவற்றில் 52 பேருக்கு இது­வ­ரைக்கும் வழக்கு தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. மேலும் 116 பேருக்கு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­பினும் அவர்­க­ளது வழக்கு விசா­ர­ணைகள் 12 வரு­டத்தை தாண்­டி­யுள்­ளது. ஆகவே இவர்­களை இதற்கு மேலும் சிறைச்­சா­லை­களில் வைத்­தி­ருப்­பதில் எந்­த­வொரு பலனும் இல்லை.

இருந்த போதிலும் அரங்­க­லவில் பல பிக்­கு­களை கொன்று குவித்த கருணா அம்மான் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சியில் அமைச்­ச­ராக செயற்­பட்டார். அதே­போன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உப தலை­வ­ரா­க­வும பதவி வகித்தார்.

இதற்கு அப்பால் கே. பி என்ற குமரன் பத்­ம­நாதன் கொழும்பில் மிகவும் ஆடம்­ப­ர­மாக வாழ்ந்து வந்தார். ஆனால் எந்­த­வொரு குற்­றமும் அறி­யாத அப்­பாவி இளை­ஞர்கள் சிறையில் தடுத்து வைக்­கப்­ப­டு­வதில் எந்­த­வொரு பிர­யோ­சனமும் இல்லை. இவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும். ஆகவே அர­சியல் கைதி­களை விடு­விப்­பது ஒரு­போதும் பிழை­யா­காது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­தலை வழங்­கப்­பட முடி­யு­மாயின் ஏன் எமது அர­சாங்­கத்­தினால் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யாது. மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் அமைச்­ச­ராக பதவி வகித்த ஜீ.எல்.பீரிஸ் இதனை அறி­யாமல் இருந்­துள்ளார். இதே­வேளை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இதற்கு மேலும் வைத்­தி­ருப்­பதில் எந்தவொ­வரு அர்த்­தமும் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்கு அர­சாங்கம் தயாராகி வருகின்றது.

அதேபோன்று காணாமல் போ னோர் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பின் குழுவிற்கு சாட்சியமளிப்பவர் களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட் டமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​... Reviewed by Author on November 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.