அண்மைய செய்திகள்

recent
-

இறுதி நிமிடங்கள்....இராஜேஸ்வரன். செந்தூரனின் " தமிழீழத்துக்கு விடுதலையைக் கொடு ஒளியையூட்டு"


தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப்பேரவை வலியுறுத்தல்....
கொக்குவில் இந்துக்கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி பயிலும் இராஜேஸ்வரன். செந்தூரன் (வயது 18) என்ற மாணவன் இன்று காலை கோண்டாவில் பகுதியில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தன் இன்னுயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவன் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக.....
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி " தமிழீழத்துக்கு விடுதலையைக் கொடு ஒளியையூட்டு" எனும் தலைப்பை இட்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இக்கடிதத்தில் " அதிமேதகு ஜனாதிபதி மைத்திரியினுடைய நல்லாட்சி அரசாங்கங்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

 மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்கமுடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கின்றது " என தெரிவித்து தமிழீழத்தில் என்றும் தமிழ் உறவுகளை உயிராய் நேசிக்கும் உண்மையுள்ள ஆர். செந்தூரன் என தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.
இம்மாணவனின் மேற்குறித்த கோரிக்கையை நல்லாட்சி அரசாங்கம் கருத்திற் கொண்டு உடனடித் தீர்வினை விரைவில் ஏற்படுத்துமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வலியுறுத்துகின்றது.

ஒட்டுமொத்த தமிழர்களின் கனவும் இதுதான் ............




இறுதி நிமிடங்கள்....இராஜேஸ்வரன். செந்தூரனின் " தமிழீழத்துக்கு விடுதலையைக் கொடு ஒளியையூட்டு" Reviewed by Author on November 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.