அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல்.(படங்கள் இணைப்பு)

தேசிய உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இன்று வியாழக்கிழமை(26) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான் மற்றும் முசலி ஆகிய 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் உணவு உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அதனை பாதுகாத்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாய செய்கை,மரக்கறிச் செய்கை,வீட்டுத்தோட்டம் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரித்தல் தொடர்பாகவும் விவசாய செய்கைக்கு விவசாய திணைக்களங்களின் ஊhக உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டதோடு விவசாய தேவைகளுக்கு நீரை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்தோடு உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் கால்நடைகளின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் மீன்பிடியை ஊக்குவித்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதோடு,குறித்த உணவு உற்பத்திகள் தொடர்பில் பிரதேசச் செயலாளர் பிரிவுகளினூடாக உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறித்த தேசிய உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,பிரதேசச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


(மன்னார் நிருபர்)
(26-11-2015)





மன்னாரில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல்.(படங்கள் இணைப்பு) Reviewed by NEWMANNAR on November 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.