அண்மைய செய்திகள்

recent
-

திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கப்போகும் அரசாங்கம்...



திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு தாரை­வார்த்து அங்கு அமெ­ரிக்க படை முகாம்­களை அமைப்­ப­தற்கு அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இது நாட் டின் தேசிய பாது­காப்­பிற்கும் தெற்கா­சி­ யா­வுக்கும் பாது­காப்பு அச்­சு­றுத்­த­லாகும் என முன்னாள் அமைச்சரும் சம சமாஜக் கட்­சியின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண எச்சரிக்கை விடுத்தார்.

உலக பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் சர்­வ­ தேச நாடுகள் இலங்­கையின் விட­யத்தில் தலை­யி­டு­வதைப் போன்று அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் தெரி­வித்தார்.

கொழும்பு பொர­ளையில் உள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற சோஷ­லிச மக்கள் முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பயங்­க­ர­வா­திகள் பிரான்ஸில் நடத்­திய காட்­டு­மி­ராண்டித் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­வர்கள் தொடர்பில் எமது கவ­லை­யையும் அனு­தா­பத்­தையும் இத்­த­ரு­ணத்தில் தெரி­வித்துக் கொள்­கிறோம்.

இதே­வேளை, உலக பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்கு சர்­வ­தேசம் ஒன்­றி­ணைந்து போரா­டப்­போ­வதை வர­வேற்­கின்றோம்.இலங்­கையில் இதே­போன்­ற­தொரு பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­கா­கவே எமது படை­யினர் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர்.

ஆனால் இன்று உலகப் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக போராடத் தயா­ராகும் சர்­வ­தேசம் எமது நாட்டில் பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்­டமை தொடர்பில் எமது படை­யினர் மீது குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றது.

எமது நாட்டுப் பிரச்­சி­னையில் தலை­யிட்­டது போன்று சர்வதேச ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கும் போது அவற்றில் தலை­யிட வேண்­டா­மென்று கேட்டுக் கொள்­கிறோம்.
இலங்கை அர­சாங்கம் இன்று முழுக்க முழுக்க அமெ­ரிக்­காவின் சார்­புத்­தன்­மை­யா­ன­தாக கீழ்­ப­டிந்து உள்­ள­தென அந்­நாட்டின் உயர் இரா­ணுவ அதி­காரி ஒருவர் தெரி­வித்­துள்ளார்.
அமெ­ரிக்கா தனது பாது­காப்பு தொடர்பில் கடல் வல­யத்­தி­னூ­டாக முன்­னெ­டுத்து வரும் பாது­காப்­பிற்­காக திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை கைப்­பற்றும் முயற்­சியை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

அர­சாங்­கமும் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை அமெ­ரிக்­கா­வுக்கு தாரை­வார்ப்­ப­தற்கு தயா­ராக உள்­ள­தோடு திரு­கோ­ண­ம­லையில் அமெ­ரிக்கப் படை­யி­னரின் முகாம்­களை அமைப்­ப­தற்கும் அனு­மதி அளிக்க முன்­வந்­துள்­ளது.

இது பயங்­க­ர­மான நிலை­மை­யாகும். இவ்­வா­றான நிலை ஏற்­பட்டால் அது சீனாவுக்கும் ஆபத்தானதாக அமையும். அது மட்டுமல்லாது இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாகும்.கடந்த ஆட்சிக் காலத்தில் இதற்கு நாம் அனுமதி வழங்கவில்லை என்றார்.
திருமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்க்கப்போகும் அரசாங்கம்... Reviewed by Author on November 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.