அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் அவர்களுக்கு தற்போது ஓய்வு தேவைப்படுகின்றது-அவரை பார்ப்பதை தற்போதைக்கு தவிர்க்கவும்-குரு முதல்வர்.



கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில்; சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில் மன்னார் ஆயர் இல்லத்தில் தற்போது நலமுடன் இருப்பதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

ஆயரின் நிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நல்ல சுகத்துடன் நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி நாடு திரும்பிய ஆயர் அவர்கள் விசேட உலங்கு வானுர்தி மூலம் மன்னாருக்கு அழைத்து வரப்பட்டார்.

தற்போது ஆயர் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்திலேயே தங்கியுள்ளார்.அவர் நல்ல சுகத்தோடு உள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இருந்த போதிலும் தனது பணியினை உடனடியாக செய்யக்கூடிய நிலையில் நாங்கள் அவரை விடவில்லை.தற்போது அவரின் உடல் நலத்திற்கு ஓய்வு தேவை.தற்போது ஆயர் அவர்கள் செபத்திலும்,ஓய்விலும் குறிப்பாக பத்திரிகைகள் படித்தல்,கடிதங்களை பார்த்தல் என்பவற்றில் கூடுதலாக ஈடுபட்டு வருகின்றார்.

-எனினும் ஆயர் அவர்களுக்கு கூடுதலான ஓய்வு தேவைப்படுகின்றது.அதிகமானவர்கள் ஆயர் அவர்களை பார்க்க ஆவலோடு இருக்கின்றார்கள்.

ஆனால் எல்லோரும் அவரை பார்ப்பது என்பது முடியாத காரியம்.அது ஆயரின் உடல் நலத்திற்கு உகந்ததாக இல்லை.
ஆனால் அதிகலவானவர்கள் வந்து ஆயர் அவர்களை பார்க்க வேண்டும் என்று கேட்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

தற்போது ஆயர் அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை.அந்த வகையில் தனது தேவைகளில் தானே ஈடுபடுவதினால் அவரை அதிகமானவர்கள் பார்ப்பதை நாங்கள் தவிர்த்துக்கொண்டுள்ளோம்.
தொடர்ச்சியாக எமது ஆயர் அவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுங்கள்.

அவர் முற்று முழுதாக சுகமடைய வேண்டும் என்பதற்காக மன்றாடிக்கொள்ளுங்கள் என உங்களை கேட்டுக்கொள்ளுவதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் ஆயர் அவர்களுக்கு தற்போது ஓய்வு தேவைப்படுகின்றது-அவரை பார்ப்பதை தற்போதைக்கு தவிர்க்கவும்-குரு முதல்வர். Reviewed by NEWMANNAR on December 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.