மன்னாரின் முத்து ஆயர் நலமாக உள்ளார்...
"மன்னாரின் முத்து கிறிஸ்த்தவர்களின் சொத்து" மதம் கடந்து தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மனிதர், அடக்கு முறைக்கும் இனத்துவேசத்துக்கும் எதிராய் சவால்களை தாண்டி ஓங்கி குரல் கொடுத்த நடுநிலை வாதி. சமநிலை,மற்றோரை கணம் பன்னுதலில் இவரின் போதனையோ சொற்களில் அடங்காதவை.

எங்கள் ஆயரின் உடல் நலம் பற்றி அறியவும் அவரின் முகம் காணும் ஆவலுடன் ஆயரின் இல்லத்திற்கு நியூ மன்னார் இணையமும் துரையம்மா அன்பகத்தின் சார்பக மற்றும் அங்கத்தவர்கள் மாலை சந்தித்தோம் மனம் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டது. புது நம்பிக்கை பிறந்தது எங்களுடன் உரையடிய ஆயர் அவர்கள் இறையாசீர் வழங்கி வாழ்த்தினார் அதிக நேரம் எடுக்க முடியதாது ஏன் எனில் ஆயர் அவர்களை காண்பற்கு இனம் மதம் மொழி கடந்து அவர் இல்லத்தில் மக்களும் ஏனைய மதத்தலைவர்களும் அமைப்புக்களும் கூடுகின்றனர் ...
பேராயரின் உடல் நிலை மிகவும் நல்ல நிலையில் உள்ளது மீண்டும் பிராத்தனைகளில் ஈடுபட வேண்டும், நமக்கு நல் வழி காட்ட முற்றிலுமாக உடல் நலம் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.
மன்னாரின் முத்து ஆயர் நலமாக உள்ளார்...
Reviewed by Author
on
December 12, 2015
Rating:

No comments:
Post a Comment