மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முறையற்ற மதுபான நிலையங்களை அகற்றுதல் தொடர்பான-மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு...
அரசாங்க அதிபர்
மாவட்டச் செயலகம்
மன்னார்...
மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முறையற்ற மதுபான நிலையங்களை அகற்றுதல் தொடர்பானது
ஒரு நாட்டின் சமூக அபிவிருத்திக்கு முதன்மையாக அமைவது அந்நாட்டின் பிரஜைகளின் ஒருமைப்பாடு சமதானம் நல்லிணக்கம் என்பனவாகும். அதன் அடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை சீர்குழைக்கும் பிரதான ஒன்றாக மதுபாவனையை குறிப்பிட முடியும். எமது ஜனாதிபதியின் தலைமையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மது போதைவஸ்து ஒழிப்புச் செயற்றிட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின் மக்களின் அபிவிருத்திக்கு இடையூறாக உள்ள மதுபானச் சாலைகளையும் முறையற்ற மது பாவனையையும் பிரஜைகள் சபையாகிய நாம் இனங்கண்டுள்ளோம். குறிப்பாக
01. பேசாலை மதுபான நிலையம்
மதுவரித் திணைக்களத்தினால் இவ் மதுபானச்சாலையின் செயற்பாடு இடைநிறுத்தி வைக்கப்பட்டது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் குழுக்களுக்கிடையே சண்டைகள்ää குடிப்பவர்களால் வீட்டில் பெண்களும் பிள்ளைகளும் நிம்மதியற்று காணப்படுகிறார்கள். சம்பாதிக்கும் பணத்தில் அரைவாசிக்கும் மேல் சாராயத்திற்காகவே செலவாகிறது. ஆனால் எமது பெண்களும் ää பிள்ளைகளும் நிம்மதியாகவும் பாதுகாப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வித்தேவைகளை பயன்படுத்தமுடியாமல் கல்வியைத் தொடர முடியாத நிலையும் காணப்படுகிறது.இந்நிலை தொடராமல் இருப்பதற்கு இங்கு காணப்படும் மதுபான கடையை மூடுவதற்கு தேவையான ஏற்பாட்டினை செய்வதோடு இவ் மதுபானச்சாலையின் அனுமதியினை வழங்காமல் இருக்க உறுதிசெய்வீர்கள் என நம்புகின்றோம்.
02. பெரியகடை மதுபான நிலையம்
இவ் மதுபான நிலையமானது அரச சட்டதிட்டங்களை மீறி அமைக்கப்பட்டுள்ளது உதாரணம் உப்புத் தொழிற்சாலை மற்றம் பொலிஸ் நிலையம். மீன்பிடி சமாச அலுவலகம் இந்து ஆலயம் மக்கள் குடியிருப்புக்கு நடுவே அமைந்துள்ளது என்பதையும் தெரியப்படுத்துவதோடு இவ் மதுபானச்சாலையை வேறு இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
03. போத்தல் கள்ளு பயன்பாடு
எமது மாவட்டத்தின் இயற்கை முறையில் பெறப்படும் கள்ளு உற்பத்தி இருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்தர்து ஆட்கொல்லிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் செயற்கை போத்தல் கள்ளு விற்பனை செய்யப்படுகிறது. எமது மாவட்டத்திற்கு எடுத்துவரப்படும் போத்தல் கள்ளினை தடைசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
04. புதிய மதுபானச்சாலைகளுக்கான அனுமதி வழங்கப்படல்
தடைசெய்யப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் மதுபானச்சாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்கப்படலை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட விடங்களை செயற்படுத்துவதற்கு பிரiஐகள் சபைகளாகிய எமது பூரண ஒத்தழைப்பு தொடர்ச்சியாக இருக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு எமது மாவட்டத்தின் சமூக அபிவிருத்திக்கு பங்கம் விளைவிக்கும் சட்ட விரோதமான அனைத்துச் செயற்பாடுகளுக்கும் தங்களது விசேட அவதானிப்பை செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
மன்னார் மாவட்ட பிரஜைகள் சபை ஒன்றியம்
மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முறையற்ற மதுபான நிலையங்களை அகற்றுதல் தொடர்பான-மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு...
Reviewed by Author
on
December 11, 2015
Rating:
No comments:
Post a Comment