தேசிய விளையாட்டு விழா : கூடைப்பந்தாட்டத்தில் கிழக்கிற்கு தங்கம்...
41ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை திணைக்களமும் நடத்திய இப் போட்டிகள் கொழும்பு ரோயல் கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கில் வார இறுதியில் நடைபெற்றன.
ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மத்திய மாகாணத்தை எதிர்த்தாடிய கிழக்கு மாகாணம் கடும் சவாலுக்கு மத்தியில் 71 க்கு 70 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
தங்கப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாண அணியில் எஸ். விஜிதரன் (தலைவர்), எஸ். விதுர்ஷன், எம். என். ஹசன், எல். ருக் ஷான், கே. சி. ஆஷான், எஸ். டினூர்ஷன், ஐ. ஏ. வெனிட்டோ, ரீ. நிதுஷன், வி. விஜய், வி. விவேக், எம். கே. ஷிரான் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேல் மாகாணம் வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தது.
தேசிய விளையாட்டு விழா : கூடைப்பந்தாட்டத்தில் கிழக்கிற்கு தங்கம்...
Reviewed by Author
on
December 09, 2015
Rating:
Reviewed by Author
on
December 09, 2015
Rating:


No comments:
Post a Comment