தேசிய கராத்தேயில் கிழக்கு மாகாணத்திற்கு வௌ்ளி, வெண்கல பதக்கங்கள்...
அனுராதபுரம் உள்ளக அரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9 மாகாணங்கள் பங்கு பற்றிய 41 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தேசிய கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எஸ்.பால்ராஜ் காட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கத்தையும்,75 கிலோ கிராம் குமிட்டி பிரிவில் சம்பத் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற தேசிய கராத்தேப் போட்டியில் இலங்கையின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வீரர்கள் கலந்து கொண்டனர்.
கராத்தேப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எஸ்.பால்ராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பால்ராஜிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரர்களுமே தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக வடமத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கான பதக்கங்களை அணிவித்தார்.
தேசிய கராத்தேயில் கிழக்கு மாகாணத்திற்கு வௌ்ளி, வெண்கல பதக்கங்கள்...
Reviewed by Author
on
December 09, 2015
Rating:
Reviewed by Author
on
December 09, 2015
Rating:


No comments:
Post a Comment