மாமியார் டயானாவின் தோற்றத்தில் வந்த பிரித்தானிய இளவரசி: கலகலப்பான அரண்மனை விருந்து நிகழ்ச்சி...

பிரித்தானிய அரண்மனை நிகழ்ச்சி ஒன்றில் மாமியார் டயானாவின் நகையை அணிந்துகொண்டு வந்த பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் விருந்தில் கலந்துகொண்ட அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் ஆண்டுதோறும் அரண்மனை உயர் அதிகாரிகளுக்கு விருந்து நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து வருகிறார்.
இவ்வாண்டிற்கான விருந்து நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் அண்மையில் நடைபெற்றபோது சுமார் 1,500 முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
விருந்தில் கலந்துக்கொள்வதற்காக பிரித்தானிய இளவரசரான கேட் மிடில்டன் மற்றும் அவரது கணவர் வில்லியம் ஆகிய இருவரும் உயரக பெண்ட்லி காரில் வந்து இறங்கியுள்ளனர்.
அப்போது கேட் மிடில்டனை கவனித்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
வில்லியமின் தாயாரும் முன்னாள் இளவரசியுமான டயானாவின் நகையை கேட் மிடில்டன் அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தலையில் சிரிய கிரீடம் போன்று அணியப்படும் அந்த வைர நகையை கடந்த 1981ம் ஆண்டு டயானா மற்றும் சார்லஸ் ஆகியயவரின் திருமணத்தின்போது மகாராணி டயானாவிற்கு பரிசாக அளித்திருந்தார்.
முந்திய அரசு நிகழ்ச்சிகளில் டயானா எப்போதும் அந்த நகையுடன் காட்சி அளித்ததால், டயானாவின் முக்கிய அடையாளமாக அந்த நகையாக மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தது.
டயானாவின் இறப்பிற்கு பிறகு, அந்த நகை தற்போது கேட் மிடில்டன் பயன்படுத்தி வருகிறார்.
கேட் மிடில்டனின் திருமணத்தின்போது இதே நகையை அணிந்திருந்ததை, தற்போது மீண்டும் டயானாவின் நகையுடன் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாமியார் டயானாவின் தோற்றத்தில் வந்த பிரித்தானிய இளவரசி: கலகலப்பான அரண்மனை விருந்து நிகழ்ச்சி...
Reviewed by Author
on
December 09, 2015
Rating:
Reviewed by Author
on
December 09, 2015
Rating:



No comments:
Post a Comment