அண்மைய செய்திகள்

recent
-

வடகொரியாவின் அணு குண்டு வெடிக்க தயார்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேரதிர்ச்சி....


பேரழிவை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயாராக இருப்பதாக வடகொரியா ஜனாதிபதி அறிவித்தமையால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது.  
அமெரிக்கா,ரஷ்யா, போன்ற  நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சர்வதேச ஒப்பந்தங்களையும் மீறி வடகொரியா அணு குண்டு சோதனைகளை நடத்தி வந்துள்ளது. மேலும் அணு ஏவுகணைகளையும் அந் நாடு அவ்வப்போது சோதித்து வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் வடகொரியா  எதையும் கண்டுகொள்ளாமல், தனது அணு ஆயுத திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில், வடகொரியா புதிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கி உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி  கிம் ஜாங் -உன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் வடகொரியாவின்,  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளத்தைப் பார்வையிட்ட கிம் ஜாங் -உன், ‘‘வடகொரியா ஏற்கெனவே வலிமை வாய்ந்த அணு ஆயுத நாடு. வடகொரியா தனது இறையாண்மையை காத்துக்கொள்வதற்கு அணு குண்டையும், ஹைட்ரஜன் குண்டையும் வெடிக்க தயார்’’ என்று கூறினார். இதுகுறித்த தகவல்களை அந்த நாட்டின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனம், ‘கே.சி.என்.ஏ.’ நேற்று வெளியிட்டுள்ளது.

அணு குண்டுகளைப்  பொறுத்த அளவில், அவை அணு பிளப்பு கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. இதில் அணுவை பிளக்கிறபோது, அவை பெரும் ஆற்றலை வெளியிடும். ஹைட்ரஜன் குண்டுகள் தொடக்க நிலை பிளப்பு வெடித்தலில் இருந்து ஆற்றலைப் பயன்படுத்தி மிகவும் அதிக ஆற்றல் உள்ள அணு கருச்சேர்க்கை வெடித்தலை உருவாக்கும். இதனால் அணுகுண்டுகளை விட,ஹைட்ரஜன் குண்டு அதிக சக்தி வாய்ந்தது என்று  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகொரியாவின் அணு குண்டு வெடிக்க தயார்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேரதிர்ச்சி.... Reviewed by Author on December 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.