அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை சிவசுப்ரமணிய கோவில் உடைத்து திருட்டு!


பேசாலை சிவசுப்ரமணிய கோவிலின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.

நேற்று இரவு பேசாலை சிவ சுப்ரமணிய கோவில் கதவினை உடைத்து விக்கிரகத்தின் அடிப்பகுதியில் வைக்கபட்டிருந்த இயந்திர தகடு மற்றும் விக்கிரகத்திற்கு அணிவிக்கப்பட்டிருந்த கால் பவுண் தங்கச் சங்கிலியும் திருடப்பட்டுள்ளது.

கோவிலின் பூசகர் மகா தர்மகுமார குருக்கள் இன்று அதிகாலை கோவிலுக்கு சென்றுள்ளார். இதன் போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விக்கிரகத்தின் அடி பகுதியில் வைக்கப்பட்டிருந்த எந்திர தகட்டுக்காகவே குறித்த திருட்டு நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்படகிறது.

குறித்த விடயம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




பேசாலை சிவசுப்ரமணிய கோவில் உடைத்து திருட்டு! Reviewed by Author on December 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.