12 வயது சிறுமியின் காதில் வசிக்கும் எறும்புகள்,,,
அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி ஒருவரின் காதில் ஏராளமான எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகில் உள்ள தீசா என்ற நகரத்தை சேர்ந்தவர் ஸ்ரேயா டார்ஜி(12).
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரேயா காதில் எறும்பு ஊருவது போல் அரிப்பு ஏற்படுவதாக தனது தந்தை சஞ்சய் தார்ஜியிடம் தெரிவித்துள்ளார்.
அவரும் உடனடியாக ஸ்ரேயாவை அருகில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரிடம் அழைத்துச் சென்றார்.
அப்போது சிறுமியின் காதில் இருந்து பெரிய அளவிலான கட்டெறும்புகள் 10 வரை வெளியே எடுக்கப்பட்டது.
பின்னர் 2 வாரங்கள் கழித்து மீண்டும் இதேபோல் சிறுமியின் காதில் இருந்து சாரை சாரையாக கட்டெறும்புகள் வெளியே எடுக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமி சிறந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிறுமியின் காதில் லேபட்ராஸ் கோபிக் கேமராவை செலுத்தி மருத்துவர்கள் ஆய்வு செய்து பார்த்த போது உள்ளே வேறு எறும்போ அல்லது எறும்பு முட்டைகளோ எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
எனினும் தொடர்ந்து சிறுமியின் காதில் இருந்து எறும்புகள் வெளியேறுவது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த மருத்துவர் ஜவகர் தல் சானியா கூறியதாவது, எனது 32 ஆண்டு மருத்துவப் பயிற்சியில் இது போன்று காதில் எறும்பு உற்பத்தியை நான் கண்டதில்லை.
மருத்துவ துறை வரலாற்றிலும் இதுபோன்று நடந்தது இல்லை. பெரிய எறும்புகள் சிறுமியின் காதில் வசித்து வருகின்றன.
எறும்புகள் சிறுமியின் காதை கடிக்கின்றன. எனினும் சிறுமிக்கு வலியும் தெரியவில்ல காதில் சேதமும் இல்லை.
கடந்த வாரம் சிறுமியின் காதில் இருந்து 10 எறும்புகள் எடுத்தோம். நேற்று மீண்டும் 10 எறும்புகள் உள்ளே இருந்து வருகிறது.
இது மருத்துவத்தில் அதிசயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
12 வயது சிறுமியின் காதில் வசிக்கும் எறும்புகள்,,,
Reviewed by Author
on
January 25, 2016
Rating:

No comments:
Post a Comment