முதலாம் தரத்திலிருந்தே பாலியல் கல்வி...!
இலங்கையில் பாலியல் கல்வியை முதலாம் தரத்திலிருந்தே முன்னெடுக்க தேசிய சிறுவர்கள் அதிகார சபை பரிந்துரை செய்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் வகுப்பு முதல் கட்டம் கட்டமாக பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என அந்த அமைப்பு கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தேசிய சிறுவர்கள் அதிகார சபையின் தலைவி நடாஷா பாலேந்திரர் தெரிவித்தார்.
இலங்கையில் சிறார்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் ஒரு முயற்சியாக சிறார்களுக்கு தமது உடலின் உறுப்புக்களின் வளர்ச்சி ஆகியவை அடங்களாக இப்பாடத்திட்டம் அமையவுள்ளதாக தெருவித்தார்.
இப்படியான கல்வியறிவை கற்பிக்கும் போது, பாலியல் துஷ்பிரயோகம் என்றால் என்ன என்பதை சிறார்கள் அறிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளளாலம் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டங்ககளால் மட்டும் சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது பெற்றோர் அல்லது பெரியோர்களும் இது தொடர்பில் சிறார்களுடன் பேசி, புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெருவித்தார்.
முதலாம் தரத்திலிருந்தே பாலியல் கல்வி...!
Reviewed by Author
on
January 25, 2016
Rating:

No comments:
Post a Comment