இரண்டு மாதங்களில் 6 நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வரும் ....ஏன் ?
கடந்த ஆறுமாத காலத்தில் சர்வதேச நாடுகளின் 25 போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளத நிலையில் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. இலங்கையின் ஆட்சிகாலத்தில் இவ்வாறான போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிடிருப்பது இதுவே முதற்தடவையாகும் என்று கடற்படை அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பாதுகாப்பு போர்க்கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டின் ஆறுமாத காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 25 போர்க்கப்பல்கள் விஜயம் மேற்கொண்டுள்ளன. இதில் ரஷ்யா, அவுஸ்திரேலிய, ஜப்பான், பங்களாதேஷ், ஓமன், இந்தியா,பாகிஸ்தான்,கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளன.
அதேபோல் அடுத்த இரண்டுமாத காலத்தில் மேலும் ஆறு சர்வதேச போர்க்கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளன. பிரித்தானியா,தென்னாபிரிக்கா, ஓமன், நைஜீரியா, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த போர்க்கப்பல்களே இலங்கைக்கு வரவுள்ளன.
இரண்டு மாதங்களில் 6 நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை வரும் ....ஏன் ?
Reviewed by Author
on
January 26, 2016
Rating:

No comments:
Post a Comment