அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொண்டாடப்பட்ட தைத்திருநாள் உழவர் விழா-20-01-2016


மன்னார் மாவட்ட செயலாளரின் ஏற்பாட்டில், உழவர்களை கௌரவிக்கும் விதமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 20-01-2016 உழவர் விழா கொண்டாடப்பட்டது.

திட்டமிடல் பணிப்பாளரும், இந்து மன்ற தலைவருமாகிய சிறி பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய கலந்து கொண்டு விழாவிணை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இருந்து மூத்த உழவர்கள் இருவர் என்ற அடிப்படையில் பத்துபேருக்கு மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய பொன்னடைபோர்த்தி பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார்.இவ்நிகழ்வில்  கலைநிகழ்ச்சிகள் அதிதிகள் உரைகள் இடம் பெற்றது


இதேவேளை குறித்த நிகழ்வில் மன்னார் பிதேச செயலகங்களின் செயலாளர்கள், மன்னார் மாவட்ட செயலக பிரதம கணக்காளர்கள், பதவிநிலை உத்தியோகஸ்தர்கள் மூத்த உழவர்கள் மற்றும் ஊழியர்கள்கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.












மன்னாரில் கொண்டாடப்பட்ட தைத்திருநாள் உழவர் விழா-20-01-2016 Reviewed by Author on January 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.