தாய்வானின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு....
தாய்வானின் முதலாவது பெண் ஜனாதிபதியாக தஸாய் இன்க் - வென் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் (59 வயது) சீனாவிடமிருந்து தாய்வான் சுதந்திரமடைவதை வலியுறுத்தி வரும் ஜனநாயக முன்னேற்ற கட்சியின் தலைவராவார்.
தனது தேர்தல் வெற்றியையடுத்து தஸாய் உரையாற்றுகையில், சீனாவுடனான தாய்வானின் நிலைப்பாட்டை நிலைநிறுத்தவுள்ளதாக சூளுரைத்துள்ளார்.
சீனா தாய்வானின் ஜனநாயகத்துக்கு மதிப்பளிப்பதுடன் இரு தரப்பினரும் சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என அவர் கூறினார்.
சீனாவானது தாய்வானை தனது நாட்டிலிருந்து பிரிந்த ஒரு மாகாணமாகவே நோக்கி வருகிறது. தேவைப்படும் பட்சத்தில் தாய்வானை பலவந்தமாக மீள இணைத்துக் கொள்ள நேரிடும் என அந்நாடு அச்சுறுத்தி வருகிறது.
தாய்வானுக்கான புதிய சகாப்தம் மலர்ந்துள்ளதாக குறிப்பிட்ட தஸாய், நாடு எதிர்கொண்டுள்ள பிரதான பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து செயற்பட உறுதியளித்துள்ளார்.
இதன்போது தாய்வான் மற்றும் சீனா ஆகிய இரு தரப்பு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக்கூடிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என வலியுறுத்திய அவர், சினமூட்டும் நடவடிக்கைகள் இடம்பெறுவது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் என எச்சரித்தார்.
தாய்வான் பிராந்தியத்தில் அமைதியுடனும் ஸ்திரத்தன்மையுடனும் விளங்க ஆதரவும் பங்களிப்பும் செய்யவுள்ளதாக அமெரிக்காவும் ஜப்பானும் சூளுரைத்துள்ளமை குறித்து அந்நாடுகளுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ள ஆளும் குவோமிங்டாங் கட்சியின் தலைவர் எறிக் சு தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
தஸாயிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள எறிக், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்புச் செய்துள்ளார்.
தாய்வானின் முதலாவது பெண் ஜனாதிபதி தெரிவு....
Reviewed by Author
on
January 19, 2016
Rating:

No comments:
Post a Comment