விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 : இலங்கைக்கு முதல் வெற்றி...
விழிப்புலனற்றோருக்கானஅங்குரார்ப்பண ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை விழிப்புலனற்றோர் அணி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது.
கொச்சின், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இப் போட்டியில் சகலதுறைகளில் பிரகாசித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்புலனற்றோர் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினர்.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 129 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 13.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. 56 ஓட்டங்களை பெற்ற சுரங்க சம்பத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
விழிப்புலனற்றோர் ஆசிய கிண்ண இருபதுக்கு 20 : இலங்கைக்கு முதல் வெற்றி...
Reviewed by Author
on
January 20, 2016
Rating:

No comments:
Post a Comment